இன்குலாப் என்ற தமிழ் எழுத்தாளர் எழுதிய கவிதைத் தொகுப்பொன்றுக்கு சாகித்ய அகாடமி விருது இந்தாண்டு அளிக்கப்படுகிறது. இருநாள்களுக்கு முன் வந்த செய்தி இது.
இவ்விருதைப் பற்றி இன்னொரு தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் என்பவர் எழுதியது இங்கே:
''இன்குலாப் இலக்கியத்திற்கான சாகித்ய அக்காதமி விருதைப் பெற்றிருக்கிறார் .வழக்கம்போல வானம்பாடிகள் வரிசைகட்டி விருதுபெறுவதைப் போலத்தான் இங்குலாபுக்கு அளிக்கப்பட்ட விருது. தீவிரஇடதுசாரிகள் சுவரில் எழுதிப்போடும் கோஷங்களின் தரம்கொண்டவை அவருடைய வரிகள். தேய்வழக்குகளை மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருந்தவர். ஒருவரியேனும் கவிதையென எழுதியவர் அல்ல.
இந்த முற்போக்கு இவரைப்போன்ற கல்லூரி ஆசிரியர்கள் அக்காலத்தில் கொண்ட ஒரு பிரத்யேகவகையான நடிப்பு. கவிதை அக்கவிஞனின் அந்தரங்கநேர்மையின் ஒலி. இங்குலாப் அந்தப்பெயரில் ஒளிந்துகொண்ட வழக்கமான கல்லூரி ஊழியர், அவ்வளவே.இன்குலாப் அவருடைய லாபியால் நோபல் வாங்கியளிக்கப்பட்டாலும் கவிஞரோ இலக்கியவாதியோ ஆவதில்லை. அவரைத்தெரிவுசெய்த நடுவர்களுக்கு இலக்கியமென்பது என்ன என்று தெரியவில்லை என்பதைத்தவிர இவ்விருதால் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
ஆனால் காலமெல்லாம் இந்திய அரசெதிர்ப்பாளராக பாவனைசெய்தவருக்கு அளிக்கப்படும் சாகித்ய அக்காதமி ஒருவகையில் அவர் ஒங்கிக்கூச்சலிட்ட அனைத்து புரட்சிகளையுமே காலிசெய்வது என்பதை அவருக்காக உழைத்தவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அல்லது அவர்கள்தான் சரியாகப்புரிந்துகொண்டிருக்கிறார்களோ? அவர் ஏங்கியதே இதைத்தானோ?''
படைப்பிலக்கியத்திற்காக இன்குலாப் என்ற கவிஞருக்கும், மொழிப்பெயர்ப்புக்காக யூமா வாசுகி @ மாரிமுத்துவுக்கும் இவ்வாண்டு விருதுகள். யூமா வாசுகியைப் பாராட்டி எழுதிவிட்டு, பின் குறிப்பாக மேலே கண்டதை எழுதியிருக்கிறார். யாரும் எப்படியும் எழுதலாம். சரிதான். ஆனால் மாரிமுத்துவின் நிலை எப்படி இருக்கும் இதைப்படித்தால்? நம்மைப்பற்றி எழுதாமலே விட்டிருக்கலாம். அல்லது நாந்தானா கிடைத்தேன் இன்னொரு எழுத்தாளரை வசைபாட?
இத்தனைக்கும் இன்குலாம் ஒரு மறைந்த கவிஞர்.

No comments:
Post a Comment